Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செண்ட்டிமெண்ட் தூக்கலாக இருக்குமாம்… கைதி 2 அப்டேட்!

Webdunia
புதன், 26 மே 2021 (12:14 IST)
கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் கைதி.

மாநகரம், கைதி ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாஸ்டர் படத்தை அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் என்ற படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கைதி படம் இப்போதைக்கு உருவாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவிடம் ரசிகர்கள் இந்த கேள்வியை முன்வைத்த போது ‘கைதி 2 கண்டிப்பாக உருவாகும். அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் கைதி படம் பற்றிய மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகம் முழுக்க முழுக்க ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட நிலையில் இரண்டாம் பாகத்தில் அப்பா மகள் செண்ட்டிமெண்ட்டுக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments