Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் எட்டி உதைத்த நபர்… அதிர்ச்சியான படக்குழு… ஆனால் செந்திலின் பெருந்தன்மை!

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (15:45 IST)
நடிகர் செந்தில், பல படங்களில் தன்னுடைய சக நடிகர் கவுண்டமணியிடம் அடிவாங்கும் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

ஆனால் அவரின் இந்த கதாபாத்திரமே, ஒரு தர்மசங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது. அது சம்மந்தமாக நடிகர் காதல் சுகுமார் பகிர்ந்துள்ள ஒரு பதிவு முகநூலில் கவனம் பெற்றுள்ளது.

அவரின் பதிவு

எனது முதல் திரைப்படமான "காதல் சாதி"யில் செந்தில் அண்ணன் பேரனாக நடித்திருந்தேன். அப்போது அண்ணனிடம் எதாச்சும் பேசிக்கொண்டே இருப்பேன்.
"அண்ணே எல்லாரையும் சிரிக்க வைக்கிற உங்கள சங்கடப்படுத்துற மாதிரி எதாச்சும் இருக்காண்ணே?"...

என்று கேட்டபோது ரொம்ப வருசத்துக்கு முன்னால பொள்ளாச்சிப் பகுதியில் ஒரு படப்பிடிப்பு நடக்கும்போது ஏகப்பட்ட கூட்டம் வேடிக்கை பார்க்க கூடியிருந்துச்சி...

ஒரு மேடான பகுதியில நான் தரையில ரிலாக்ஸா உக்காந்துட்டு இருந்தேன். திடீர்னு கூட்டத்துல ஒருத்தன் முதுகுல உதைச்சிட்டான்.. நிலைகுலைஞ்சி மேட்டுல இருந்து உருண்டு கீழ விழுகிறேன்.. கூட்டத்துல கொஞ்சபேரு கைதட்டி சிரிக்கிறாங்க.. ஊர்மக்களும் படத்துல வேலை செஞ்சவங்களும் அவனை பிடிச்சி ரெண்டு போடுபோட்டு ஏண்டா இப்டி பண்ணேன்னு கேட்டா...

" படத்துல கவுண்டமணி உதைச்சா அண்ணே வலிக்காத மாதிரி நடிக்கிறாரு.. நான் உதைச்சாலும் அப்டித்தான் பண்றாரான்னு பார்த்தேன்னு சொல்லவும்.. அவனை திட்டி மன்னிப்பு கேட்க வைக்க அடிக்கவே  ..

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம் அவனை விட்ருங்க தெரியாம ஏதோ பண்ணிட்டான்" என்று கூறியிருக்கிறார். அந்த மனதுதான் செந்தில் அண்ணன்.!!

#இப்படி பொது இடங்களில் சூட்டிங்கின் போது பல சங்கடங்கள் நடிகர் நடிகைகளுக்கு நேரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் என் மேல் ‘அதற்காக’ அதிருப்தியில் இருக்கலாம்.. வெங்கட்பிரபு பகிர்ந்த தகவல்!

வெற்றிமாறன் எனும் மாஸ்டர் பில்ம்மேக்கர்… ‘விடுதலை 2’ படத்தைப் பாராட்டிய தனுஷ்!

சூர்யா 4 படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு எப்போது?... அறிவித்த கார்த்திக் சுப்பராஜ்!

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments