Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'காலா' இசை வெளியீடு எங்கு தெரியுமா?

Webdunia
வெள்ளி, 4 மே 2018 (17:17 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தின் இசை வெளியீடு வரும் 9ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த படம் வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி வெளியாகும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடத்தை தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
 
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரமாண்டமாக 'காலா' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்லவுள்ளனர். மேலும் ஃபேஸ்புக், யூடியூப், டுவிட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களில் இந்த விழா நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
 
இந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும், தன்னை நோக்கி வைக்கப்படும் கடுமையான விமர்சனங்களுக்கு பதிலளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments