Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் அல்டிமேட் முடிஞ்சதும் ஜூலி செஞ்சது இதுதான்… வைரலாகும் புகைப்படங்கள்!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (16:29 IST)
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி முடிந்ததை அடுத்து வெற்றியாளராக பாலாஜி முருகதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ‘யார்றா இந்த பொன்னு?’ என ஜூலியைப் பார்த்தவர்கள் அதன் பின் பிக்பாஸில் கலந்துகொண்ட போது ‘என்னடா இந்த பொன்னு?’ என ஷாக்காகினர். அந்த அளவு கெட்ட பெயரோடு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ஜூலி. அதன் பின் சில திரைப்படங்களில் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் எதுவும் ரிலிஸாகவில்லை. சில படங்களில் துக்கடா கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் மட்டுமே இப்போது வரைக் கிடைத்துள்ளது. இந்நிலையில் நீண்ட காலமாக சமூகவலைதளங்களில் காணாமல் போன ஜூலி இன்று திடீரென கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதையடுத்து அவர் புகைப்படங்கள் பகிரும்போதெல்லாம் மோசமாக கமெண்ட் செய்துவந்தனர் ரசிகர்கள்.

இப்போது விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 4 சீசன்களிலும் கலந்துகொண்ட போட்டியாளர்கள் கலந்துகொள்ளும் நடன நிகழ்ச்சியில் அவரும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டு இறுதிக்கட்டம் வரை சென்று பின்னர் கடைசி நேரத்தில் வெளியேறினார். இந்த சீசனில் தற்போது வெற்றியாளராக பாலாஜி முருகதாஸ் அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததை அடுத்து ஜூலி வரிசையாக எல்லா பிக்பாஸ் போட்டியாளர்களையும் நேரில் சென்று சந்தித்து வருகிறார். மேலும் அவர்களுடன் எடுத்துக்கொண்ட ரி யூனியன் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்
Show comments