Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கற்றது தமிழ் படத்துக்கு ஏன் தேசிய விருது கிடைக்கலை?.. பல வருடங்கள் கழித்து ஜீவா பகிர்ந்த தகவல்!

vinoth
சனி, 1 மார்ச் 2025 (11:35 IST)
இயக்குனர் ராம் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜீவா, அஞ்சலி மற்றும் கருணாஸ் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் கற்றது தமிழ். இந்த படம் ரிலீஸான போது தோல்விப் படமாக அமைந்தது. ஆனால் ரிலீஸுக்குப் பிறகு கவனிக்கப்பட்டு ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டது. குறிப்பாக யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் இன்று வரை கொண்டாடப்படுபவைகளாக அமைந்துள்ளன.

இந்த படம் ஜீவாவின் கேரியரில் ஒரு மைல்கல் படமாக அமைந்தது என்று சொன்னால் மிகையாகாது. இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து அந்த படம் பற்றி ஒரு தகவலை ஜீவா பகிர்ந்துள்ளார். அதில் “கற்றது தமிழ் படத்தில் நடிக்கும் போது எனக்கு தேசிய விருதெல்லாம் கிடைக்கும் என்று உசுப்பி விட்டார்கள்.  ஆனால் ஒரு விருதும் கிடைக்கவில்ல. ஏனென்றால் அந்த படத்தின் தயாரிப்பாளர் இறந்து விட்டதால் எந்த விருதுக்கும் விண்ணப்பிக்கவில்லை.

அதன்பிறகு எனக்கு விருதுகள் மேல் இருக்கும் ஆசையே போயிடுச்சு. மக்கள் கொடுக்கும் பாரட்டுகள்தான் விருது என எந்த விருது நிகழ்ச்சிகளும் செல்வதே இல்லை” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கற்றது தமிழ் படத்துக்கு ஏன் தேசிய விருது கிடைக்கலை?.. பல வருடங்கள் கழித்து ஜீவா பகிர்ந்த தகவல்!

தனுஷின் ‘இட்லி கடை’ திரைப்பட ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்பு?.. காரணம் இதுதான்!

சுந்தர் சி &கார்த்தி கூட்டணியில் ஒரு படம்.. தயாரிப்பாளர் இவர்தான்!

குழப்பிய சிம்பு… ஆர்யா பக்கம் ஒதுங்கிய ‘2018’ பட இயக்குனர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments