Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரிஷ்யம் 3 கதை… ஜீத்து ஜோசப்பின் இமெயில் நிரம்பிய சோகம்!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (20:24 IST)
ஜீத்து ஜோசப் இயக்கிய திருஷ்யம் 2 படம் வெற்றி பெற்றதை அடுத்து அதன் மூன்றாம் பாகம் உருவாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்நிலையில் இப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப்பே இயக்கி நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் நேற்று வெளியானது. வெளியானதில் இருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் அந்த படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகளை இன்று தொடங்கியுள்ளார் இயக்குனர். இது சம்மந்தமாக நடிகர் வெங்கடேஷ் மற்றும் படக்குழிவினரோடு இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். தமிழிலும் இந்த படம் பாபநாசம் 2 என்ற பெயரில் ரீமேக் செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஜீத்து ஜோசப் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘திருஷ்யம் மூன்றாம் பாகத்துக்கான க்ளைமேக்ஸ் தயாராகி விட்டது. அது மோகன்லாலுக்கும் பிடித்து விட்டது.’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் யாரோ ஜீத்து ஜோசப் மூன்றாம் பாகத்துக்காக கதையை தேடிக் கொண்டு இருக்கிறார் என அவரின் இமெயில் முகவரியோடு கிளப்பிவிட இப்போது பலரும் அவருக்கு கதை யோசனை சொல்லி இமெயில் அனுப்பி வருகின்றனராம். தான் யாரிடமும் சென்று கதைக் கேட்கும் எண்ணத்தில் இல்லை என்றும் தன்னுடைய இமெயில் பாக்ஸ் நிரம்பி விட்டதாகவும் அவர் புலம்பி தள்ளி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

கங்கனா நடித்த எமர்ஜென்ஸி படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படத்தின் சென்சார் தகவல்!

விவேக் காட்சிகளை நேற்றுதான் படமாக்கியது போல உள்ளது… இந்தியன் 2 நிகழ்வில் கமல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments