Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியானது ஜெயம் ரவியின் அடுத்த பட போஸ்டர் மற்றும் தலைப்பு!

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2022 (15:21 IST)
ஜெயம் ரவி நடிக்க இருக்கும் 28வது திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் வடசென்னை குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவான திரைப்படம் பூலோகம். இந்த படத்தை எஸ் பி ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் கிருஷ்ணன் இயக்க ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார். ஆனால் இயக்குனருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நீண்டகாலமாக முடங்கிக் கிடந்தது. இதையடுத்து இப்போது பூலோகம் இயக்குனரின் இரண்டாவது படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார்.

இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் ஜெயம் ரவி இப்போது ஈழத் தமிழராக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பெரும்பாலான காட்சிகளை தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் இயக்குனர் கல்யாண் படமாக்கி முடித்துவிட்டார்.

இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் சற்று முன்னர் வெளியாகி கவனத்தைப் பெற்றது. அகிலன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி கப்பல் மாலுமியாக நடித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அஜித் மனைவி ஷாலினி.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

அடுத்த கட்டுரையில்
Show comments