Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடியில் ’பூமி’ ரிலீஸ்: ஜெயம் ரவியின் அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (11:29 IST)
வரும் பொங்கல் தினத்தில் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படமும் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது பொங்கல் ரிலீஸில் ஜெயம் ரவியின் பூமி திரைப்படமும் இணைந்து உள்ளது. ஆனால் இந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஜெயம் ரவியின் ‘பூமி’ திரைப்படம் ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாகத்தான் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டு இருந்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த பூமி திரைப்படம் திடீரென ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
பூமி திரைப்படம் ஹாட்ஸ்டாரின் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜெயம் ரவி, நிதி அகர்வால், சதீஷ், தம்பி ராமையா, ராதாரவி, சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இயக்குனர் லட்சுமண் இயக்கியுள்ள இந்த படத்திற்கு டட்லி ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் சுஜாதா விஜயகுமார் இந்த படத்தை தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியுடன் நடிப்பது சிறந்த அனுபவம்… ஸ்ருதிஹாசன் மகிழ்ச்சி!

ஃபஹத் பாசில் நடிக்கும் பாலிவுட் படத்தின் டைட்டில் இதுதான்… இயக்குனர் கொடுத்த் அப்டேட்!

21 நாட்களில் புஷ்பா 2 படைத்த வசூல் சாதனை… டங்கல் & பாகுபலி 2 வை முந்துமா?

லக்கி பாஸ்கர் இயக்குனர் வெங்கட் அட்லூரியோடு கைகோர்க்கும் சூர்யா?

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

அடுத்த கட்டுரையில்
Show comments