Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா சமாதிக்கு அஞ்சலி செலுத்த திரண்ட தமிழ் திரையுலகினர்!!

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2016 (12:24 IST)
உடல் நலக்குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் 22ம் தேதி சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 5ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதையடுத்து, 6ம் தேதி அவரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சமாதிக்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

 
இந்நிலையில் தமிழ் திரையுலகினர் இன்று காலை 11 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்கள். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் அருகில் இருந்து காலை 11 மணிக்கு அவர்கள் ஊர்வலமாக புறப்பட்ட அவர்கள், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு செல்கின்றனர். இந்த ஊர்வலத்தில் நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட தொழிலாளர்கள் கலந்துகொள்கின்றனர்.
 
இதனை தொடர்ந்து அவர்கள் ஜெயலலிதா சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய பிறகு போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்துக்கு சென்றும் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும் வணங்குகிறார்கள். இந்நிலையில் திரையுலகினர் ஊர்வலத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி தாணு போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

தமிழ், தெலுங்கில் சக்கைப் போடு லவ் டுடே படத்துக்கு இந்தியில் இதுதான் நிலையா?

ரெட்ரோ படத்தின் முக்கிய அப்டேட்டைக் கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்!

தியேட்டரில் வெற்றிக்கொடி நாட்டிய மணிகண்டனின் ‘குடும்பஸ்தன்’.. ஓடிடி ரிலீஸ் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments