Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா கைது - ராம் கோபால் வர்மாவின் கிண்டல்

Webdunia
புதன், 1 அக்டோபர் 2014 (14:23 IST)
ஜெயலலிதா கைது செய்யப்பட்டு பெங்களூருவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைக் காண தற்போதைய தமிழக முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள், கட்சி பிரமுகர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் பெங்களூரை தினம் முற்றுகையிடுகின்றனர். இதனை ராம் கோபால் வர்மா கிண்டல் செய்துள்ளார்.
 
நடப்பு அரசியலை அவ்வப்போது கிண்டல் செய்யவில்லை என்றால் வர்மாவுக்கு தாங்காது. கிண்டல் அதிகமாகி வழக்கு தொடரப்பட்டதும் உண்டு. சமீபத்தில் பிள்ளையார் குறித்த அவரது கமெண்ட் பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் ஜெயலலிதா கைது குறித்த தனது கிண்டலை ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார்.
 
தமிழகத்தின் தற்போதைய தலைநகரமாக பெங்களூரு திகழ்வதையும், தமிழகத்தின் தலைமைச் செயலகமாக பரப்பன அக்ரஹாரம் விளங்குவதையும் நான் மிகவும் விரும்புகிறேன். இந்தியா ஒன்றே என்பதற்கு இதுவே அதிகபட்ச உதாரணம் என்று தனது ட்விட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

200 கிமீ வேகத்தில் சென்ற அஜித் கார்.. மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டன்னிங்கான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆல்பம்!

தமன்னாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

விஷாலை நம்பாத பைனான்சியர்கள்… கனவுப் படமான துப்பறிவாளன் 2 டிராப்பா?

Show comments