Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''ஜெய்பீம்'' பட விவகாரம்... நடிகர் சூர்யாவுக்கு திரைப்பிரபலங்கள் ஆதரவு

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (18:59 IST)
ஜெய்பீம் திரைப்படக் குழுவுக்கும் நடிகர் சூர்யாவுக்கும் திரைப்பிரபலங்களின் ஆதரவு பெருகி வருகிறது.

சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். ஓடிடியில் வெளியான இந்த படம் இருளர் பழங்குடி மக்களின் வாழ்வில் நடக்கும் துயரங்களை பதிவு செய்துள்ளதாக பரவலாக நல்ல பாராட்டையும் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் கதை உண்மை சம்பவத்தை தழுவியது என்ற அடிப்படையில் சில சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது.

முக்கியமாக அதில் வில்லனாக வரும் போலீஸ் கதாபாத்திரம் வன்னியர் சமுதாயம் என்ற வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளதன் மேல் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜெய்பீம் படத்தை முன்வைத்து சூர்யாவுக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளார் பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ். இதற்கு நடிகர் சூர்யாவும் தனது தரப்பு விளக்கத்தை அளித்துவிட்டார். பின்னர் இந்தப் பட விவகாரம் தொடர்பாக பாமக சார்பில் சூர்யாவிடம் நஷ்ட ஈடு கேட்கப்பட்டது.

இந்த விவகார்த்தில்  ஜெய்பீம் படக் குழுவினருக்கும் நடிகர் சூர்யாவுக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில்,தற்போது வெற்றிமாறன், சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையைக் கேள்வி கேட்கும் ஆயுதம் சமூக நீதிதான் என தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேபோல் இயக்குநர்  அமீர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளர். அதில், சமூக நீதியை நிலைநாட்ட வலியுறுத்தும் சினிமாவையும், அதைக் கஷ்டப்பட்டு உருவாக்கும் படைப்பாளிகளையும் காக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல ; ஒரு நல்ல சமூகத்தில் கடமை. ஜெய்பீம் குழுவினருடன் எப்போதும் நான் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Good Bad Ugly ரன்னிங் டைம் இவ்ளோ நேரமா? தியேட்டரே சிதறப்போகுது! சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு!

அஜித் என்னிடம் ஏற்கனவே சொல்லிவிட்டார்.. ஆதிக் ரவிச்சந்திரனுக்கு த்ரிஷா இன்ப அதிர்ச்சி ..!

'சந்தோஷ்’ திரைப்படத்தை தடையை மீறி திரையிடுவோம்: பா ரஞ்சித் ஆவேசம்..!

அட்லி - அல்லி அர்ஜூன் படத்தின் அறிவிப்பு எப்போது? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ..!

ராமராஜன், நளினியை அவரது பிள்ளைகள் இணைத்து வைத்துவிட்டார்களா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments