Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார் படம் முதல்ல வறதுதான் சரி.. நாங்க லேட்டா வந்து கலக்குவோம்! - நடிகர் சூர்யா!

Prasanth Karthick
ஞாயிறு, 1 செப்டம்பர் 2024 (09:09 IST)

நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படமும், ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படமும் ஒன்றாக வெளியாக இருந்த நிலையில் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தது குறித்து நடிகர் சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.

 

 

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடித்து உருவாகியுள்ள படம் கங்குவா. இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் அக்டோபர் 10ம் தேதி படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 

ஆனால் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ படமும் அதே அக்டோபர் 10ம் தேதி ரிலீஸை அறிவித்ததால் பரபரப்பு எழுந்தது. இரு பெரிய படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் திரையரங்குகள் கிடைக்காமல் ஏற்படும் சிக்கலை தவிர்க்க கங்குவா திரைப்படம் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக அதன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவித்தார்.

 

இந்நிலையில் கங்குவா ரிலீஸ் தள்ளி வைத்தது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா “அக்டோபர் 10ம் தேதி சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படம் வெளிவர இருக்கிறது. அவருடைய படம் வருவதே சரி. நான் பிறக்கும்போது அவர் நடிக்கத் தொடங்கியவர். அவருக்கு மதிப்பளிப்பதே சரியாக இருக்கும் என நம்புகிறேன்.

 

கங்குவா ஒரு குழந்தை. அது பிறக்கும் தேதிதான் பண்டிகை. அன்னைக்கு கொண்டாடுவீர்கள் என்றும் நம்புகிறேன். ஆயிரம் பேரின் உழைப்பு வீண் போகாது” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் மகளை புகைப்படம் எடுத்தால் சட்ட நடவடிக்கை எடுப்பேன்: நடிகை ஆலியா பட் எச்சரிக்கை..!

மாடர்ன் உடையில் கலக்கும் அதுல்யா ரவி… வைரல் புகைப்படங்கள்!

க்யூட்டான லுக்கில் கலர்ஃபுல் புகைப்படங்களை இறக்கிய ரித்து வர்மா!

பிச்சை எடுத்தாலும் எடுப்பேன்.. வடிவேலு கூட நடிக்க மாட்டேன் – நடிகை சோனா ஆவேசம்!

தன் அப்பாவின் வாழ்க்கையை வெப் சீரிஸாக எடுக்கும் சூரி… இயக்குனர் இவர்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments