Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்க வேலையை பாருங்க - வைஷ்ணவியிடம் எகிறும் ஐஸ்வர்யா (வீடியோ)

Webdunia
திங்கள், 23 ஜூலை 2018 (12:17 IST)
பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா தத்தாவுக்கும், வைஷ்ணவிக்கும் இடையே மோதல் ஏற்படுவது போன்ற காட்சிகள் புரோமோ வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ இன்று காலை வெளியிடப்பட்டது. பிக்பாஸ் வீட்டை விட்டு ரம்யா வெளியேறியுள்ள நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் இன்று நடக்கின்றது. இந்த வாரம் வெளிப்படையாகவே யார் நாமினேஷன் செய்யப்படுகிறாரோ அவர் முன்னரே நாமினேஷனுக்கான காரணம் கூறப்படுகிறது.
 
அந்த வகையில் பொன்னம்பலம், டேனியலை நாமினேஷன் செய்கிறார். டேனியல் இன்னும் சில விஷயங்களை விளையாட்டுத்தனமாக செய்து கொண்டிருப்பதாக பொன்னம்பலம் கூறியபோது, 'என்ன மாதிரி என்று சொல்ல முடியுமா? என்று டேனியல் கேட்க அதை நீங்கள் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று பொன்னம்பலம் டேனியலுக்கு பல்பு கொடுக்கின்றார். 
 
இதனால் டேனியலின் முகம் சுருங்குகிறது. அதேபோல் வைஷ்ணவி டேனியலையும், டேனியல் வைஷ்ணவியையும், செண்ட்ராயன் மும்தாஜையும் நாமினேட் செய்கின்றனர். 
 
அதேபோல், தற்போது வெளியிடப்பட்டுள்ள 2வது புரோமோ வீடியோவில் வைஷ்ணவியிடம் கோபப்படும் ஐஸ்வர்யா ‘நீங்க உங்க வேலைய பாருங்க’ என கோபமாக பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments