Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஸ்வரூபம் 2' படத்தை விஜய் டிவி வாங்கிவிட்டதா?

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (13:35 IST)
கமல்ஹாசன் நடித்து இயக்கியுள்ள 'விஸ்வரூபம் 2' திரைப்படம் இன்னும் 4 நாட்களில் அதாவது ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியானது.
 
தற்போது வந்துள்ள ஒரு தகவலின்படி இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி பெற்றுவிட்டதாக தெரிகிறது. சற்றுமுன் விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு விஸ்வரூபம் படத்தின் ஸ்டண்ட் மேக்கிங் வீடியோ வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்மூலம் 'விஸ்வரூபம் 2' படத்தின் சாட்டிலைட் உரிமை இந்த டிவிக்கே கிடைத்திருக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
 
கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நாளில் வெளியாகிறது

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’- பூஜையுடன் தொடக்கம்!

சல்மான் கான் படத்துக்காக சிவகார்த்திகேயன் படத்துக்கு பிரேக் விடும் முருகதாஸ்!

LUC பற்றிய டாக்குமெண்ட்ரி எடுக்கும் லோகேஷ் கனகராஜ்… டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments