Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோட் படத்தோடு சினிமா கேரியருக்கு முற்றுப் புள்ளி வைக்கிறாரா விஜய்?.. தீயாய் பரவும் தகவல்!

vinoth
சனி, 15 ஜூன் 2024 (07:34 IST)
விஜய் தற்போது நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு விஜய் அரசியலுக்கு செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார்.

அவரின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார், தயாரிக்கப் போவது யார் என்பதெல்லாம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் கோட் படத்தோடு விஜய் சினிமா கேரியருக்கு முற்றுப்புள்ளி வைத்து அரசியல் பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த அதிகாரப்பூர்வமற்ற தகவல் வதந்தி என திரை வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். விஜய்யின் அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெட் ஜெயண்ட் கையில் சென்ற வேட்டையன்.. இனி எல்லா தியேட்டரும் ரஜினி படத்திற்கே..!

ஐரோப்பிய கார் ரேஸ்க்காக பயிற்சி பெறும் அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படங்கள்..!

'தலைவி’ படத்திற்கு பின் மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - கங்கனா ரனாவத்.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

அடுத்த கட்டுரையில்
Show comments