Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கில் அறிமுகமாகும் தமிழ் இசையமைப்பாளர்

Webdunia
புதன், 31 மே 2017 (11:27 IST)
தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்து வரும் லியோன் ஜேம்ஸ், தெலுங்கில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

 
 
சென்னையைச் சேர்ந்தவர் லியோன் ஜேம்ஸ். 25 வயதேயான இவர், ‘காஞ்சனா 2’, ‘கோ 2’, ‘கவலை வேண்டாம்’  படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது, விஷ்ணு விஷால், ரெஜினா நடிக்கும் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என்ற  படத்துக்கு இசையமைத்து வருகிறார். சிறிய நகரத்தில் நடக்கும் கதை என்றாலும், இசை மாடர்னாக இருக்குமாம்.
 
தமிழில் மட்டுமே இசையமைத்துள்ள இவர், தெலுங்கில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சுந்தீப் கிஷண், தமன்னா  இருவரும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். பாலிவுட் இயக்குநரான குணால் கோகில், இந்தப் படத்தை இயக்குகிறார். ‘கோ 2’, ‘கவலை வேண்டாம்’ பாடல்களைக் கேட்ட தயாரிப்பாளர், தெலுங்குப் படத்துக்கு இசையமைக்கும்  வாய்ப்பை உடனே கொடுத்துவிட்டாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆஸ்கார் விருது வென்ற நடிகர்ம் மனைவியுடன் மர்ம மரணம்,, ரசிகர்கள் அதிர்ச்சி,,!

ஹோம்லி லுக்கில் அனுபமா பரமேஸ்வரனின் க்யூட் லுக்ஸ்!

நடிகை ரைஸா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

கூலி படத்தில் இணைந்த பிரபல நடிகை.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

பிரேமலு 2 படம் தாமதமாக மமிதா பைஜுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments