தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்து வரும் லியோன் ஜேம்ஸ், தெலுங்கில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.
சென்னையைச் சேர்ந்தவர் லியோன் ஜேம்ஸ். 25 வயதேயான இவர், ‘காஞ்சனா 2’, ‘கோ 2’, ‘கவலை வேண்டாம்’ படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது, விஷ்ணு விஷால், ரெஜினா நடிக்கும் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என்ற படத்துக்கு இசையமைத்து வருகிறார். சிறிய நகரத்தில் நடக்கும் கதை என்றாலும், இசை மாடர்னாக இருக்குமாம்.
தமிழில் மட்டுமே இசையமைத்துள்ள இவர், தெலுங்கில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சுந்தீப் கிஷண், தமன்னா இருவரும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். பாலிவுட் இயக்குநரான குணால் கோகில், இந்தப் படத்தை இயக்குகிறார். ‘கோ 2’, ‘கவலை வேண்டாம்’ பாடல்களைக் கேட்ட தயாரிப்பாளர், தெலுங்குப் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை உடனே கொடுத்துவிட்டாராம்.