Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைவிரித்த சூர்யா & சிவகார்த்திகேயன்… லாரன்ஸை வைத்து படம் இயக்கும் இயக்குனர் ரவிகுமார்!

Webdunia
புதன், 20 டிசம்பர் 2023 (07:39 IST)
தமிழ் திரையுலகின் முதல் முழுநீள டைம் ட்ராவல் திரைப்படமான 'இன்று நேற்று நாளை' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இயக்குனர் ரவிக்குமார் அதையடுத்து இப்போது உருவாக்கி வரும் அயலான் படமும் ஒரு அறிவியல் புனைவுக் கதைதான். இந்த படத்துக்காக கிட்டத்தட்ட 5 ஆண்டுகளை படக்குழு செலவிட்டுள்ளனர்.

இப்போது அயலான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் பொங்கலுக்கு அந்த படம் ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து  சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார் ரவிக்குமார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்க இருந்தது. ஆனால் சூர்யா வரிசையாக மற்ற படங்களில் நடித்து வருவதால் அந்த படம் தொடங்குவது தாமதம் ஆகும் என சொல்லப்பட்டது.

அதனால் ரவிகுமார் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து இன்னொரு படத்தை இயக்குனர் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சிவகார்த்திகேயனும் இப்போது பிஸியாக இருப்பதால் அந்த படமும் தொடங்க இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என தெரிகிறது. இதனால் இப்போது இயக்குனர் ரவிகுமார் ராகவா லாரன்ஸை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். அதற்கான திரைக்கதை பணிகள் அயலான் ரிலீஸுக்கு பிறகு தொடங்கும் எனத் தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் VJS நடிக்கும் படத்தில் இணையும் முன்னணி பாலிவுட் நடிகை!

நான் ராஜமௌலி படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கிய சிரஞ்சீவி!

புஷ்பா கதாபாத்திரத்தை இப்படிதான் நான் உருவாக்கினேன் -இயக்குனர் சுகுமார் பகிர்ந்த தகவல்!

அல்லு அர்ஜுன் & அட்லி கூட்டணியில் உருவாகும் படத்துக்கு இவர்தான் இசையமைப்பாளரா?

Pure 90S Vibe GBU மாமே!: அஜித் படத்துல அண்ணன எறக்குறோம்.. ‘அக்கா மக’ டார்கிய உள்ளே கொண்டு வந்த ஆதிக்!

அடுத்த கட்டுரையில்
Show comments