Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட கால காத்திருப்பு முடிவு; வெளியாகிறது இந்தியன் 2 அப்டேட்!

Webdunia
சனி, 28 அக்டோபர் 2023 (12:56 IST)
சங்கர் இயக்கத்தில் நீண்ட காலமாக தயாராகி வரும் இந்தியன் 2 படத்தின் அப்டேட் ஒரு வழியாக வெளியாக உள்ளது.



பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் இந்தியன் 2. இவர்கள் கூட்டணியில் வெளியாகி ஹிட் அடித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகிறது. கடந்த 2019லேயே இதற்கான ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு கொரோனா, படப்பிடிப்பு தள விபத்து போன்றவற்றால் நின்று போனது.

பின்னர் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வருவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் தற்போது இந்தியன் 2 அப்டேட் குறித்த போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. நாளை காலை 11 மணிக்கு இந்தியன் 2 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் சேனாபதி (கமல்ஹாசனின் கதாப்பாத்திரம்) கையெழுத்தும் உள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

கரண்ட் போன 20 நிமிஷத்துல என்ன நடந்துச்சோ MI ஜெயிச்சிட்டாங்க! - ரவிச்சந்திரன் அஷ்வின்!

விஜய் டிவியில் மூன்று புதிய தொடர்கள்.. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

முன்பதிவு ஆரம்பித்தும் தியேட்டர் நிரம்பவில்லை.. என்ன ஆச்சு ’தக்லைஃப்’ படத்திற்கு?

நடிகைன்னா தொடணும்னு தப்பான நினைப்பு வருது! - நடிகை நித்யா மேனன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments