Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் தொடங்க உள்ள இந்தியன் 2 ஷூட்டிங் – கமல் வருவதில் சிக்கல்!

Webdunia
சனி, 9 ஜனவரி 2021 (16:37 IST)
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரி மாதம் தொடங்க திட்டமிட்டு வருகிறதாம் லைகா நிறுவனம்.

இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து முடியாமல் இழுத்துக் கொண்டே போகிறது. கமலின் அரசியல், படப்பிடிப்புத் தளத்தில் விபத்து, கொரோனா லாக்டவுன் என பலத் தடங்கல்கள் வரிசையாக வந்தவண்ணம் இருந்தன. இந்நிலையில் இப்போது கமலோ லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இதனால் இயக்குனர் ஷங்கர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது ஒருவழியாக லைகா நிறுவனம் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்கும் முடிவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் இருந்து அதற்கான பணிகளை தொடங்க உள்ளதாம். ஆனால் அப்போது கமல் லோகேஷ் இயக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் இருப்பார். இதனால் கமல் இல்லாத காட்சிகளை எல்லாம் எடுத்துவிடலாம் என்ற முடிவில் இருக்கிறதாம் படக்குழு.

தொடர்புடைய செய்திகள்

தமிழன் இந்தியாவிற்கு தலைமை தாங்க வேண்டும்.. எந்த I.N.D.I.Aவை சொல்றார்! – இந்தியன் 2 பட விழாவில் கமல்ஹாசன்!

இசைஞானி பிறந்தநாள்: அசத்தல் போஸ்டரை வெளியிட்ட ‘இளையராஜா’ படக்குழு!

மகள் பவதாரணி மரணம்..! தனது பிறந்தநாளை புறக்கணித்த இளையராஜா..!!

அண்ணனுக்கும் பிறந்த நாள்.. தம்பிக்கும் பிறந்த நாள்.. இரட்டிப்பு சந்தோஷம்: கமல்ஹாசன்

நிவேதா பெத்துராஜ் வீடியோவின் மர்மம் இதுதான்.. இதுக்கு தானா இந்த அலப்பற..!

அடுத்த கட்டுரையில்
Show comments