Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் 2 படத்தில் புதிய கேமராமேன்… ரவி வர்மனுக்கு என்னாச்சு!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (07:35 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவி வர்மன் பணியாற்றுகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியன் 2 ஷூட்டிங் நடந்த போது ரவி வர்மன் ஜப்பான் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால், பிரபல ஒளிப்பதிவாளரான ஜார்ஜ் வில்லியம்ஸை அனுப்பி சில நாட்கள் ஷூட்டிங்கை செய்யவைத்துள்ளாராம்.

வழக்கமாக ரவி வர்மன் இதுபோல பிற ஒளிப்பதிவாளர்களை தனது படங்களுக்கு க்ளாஷ் வொர்க் செய்ய அனுப்புவதில்லை. ஆனால் இந்த முறை வேறு வழி இல்லாததால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லிப் லாக் காட்சிகளில் நடிக்க லியோ படமும் ஒரு காரணம்.. ப்ரதீப் விளக்கம்!

ரி ரிலீஸ் ரேஸில் இணையும் சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’…!

காப்பிரைட் வேண்டாம் என்று சொல்வதெல்லாம் சும்மா… தேவா பற்றி ஜேம்ஸ் வசந்தனின் பதிவு!

பதம் பூஷன் விருது பெற்றவர்களுக்கு நாளைப் பாராட்டு விழா… அஜித் கலந்துகொள்ள மாட்டாரா?

ரி ரிலீஸுக்குக் காத்திருக்கும் விஜய்யின் இன்னொரு படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments