Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“தெலுங்குப் படத்தில் நடிக்கவில்லை” – கார்த்தி மறுப்பு

Webdunia
வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (10:47 IST)
தெலுங்குப் படத்தில் நடிப்பதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார் கார்த்தி. 
பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. ஹீரோயினாக ‘வனமகன்’ சயிஷா நடிக்க, பிரியா  பவானிசங்கர் கார்த்தியின் மாமா பெண்ணாக நடிக்கிறார். விவசாயி கேரக்டரில் நடிக்கும் கார்த்தி, அதைப் பெருமையாகச் சொல்லும் விதமாக தன்னுடைய  புல்லட்டில் கூட ‘விவசாயி’ என எழுதி வைத்திருப்பதாகப் படத்தில் இடம்பெறுகிறது.
 
இதைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் ரஜத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் கார்த்தி. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மூலம் ஜோடி சேர்ந்த கார்த்தி – ரகுல் ப்ரீத்சிங் கூட்டணி மறுபடியும் இணைகிறது. வேலை நிறுத்தம் முடிந்தபிறகு இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.
 
இந்நிலையில், ‘நீ நாடி ஒக்கே கதா’ படத்தை இயக்கிய ரவி உடுகுலாவின் இயக்கத்தில் கார்த்தி நடிப்பதாகவும், தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் இந்தப் படம் தயாராவதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதை கார்த்தி மறுத்துள்ளார். ‘இப்படியொரு படம் பற்றி யாரும் பேசவேயில்லை’ எனத்  தெரிவித்துள்ளார் கார்த்தி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments