Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டில் ஓவியாவை அடுத்து ரைசா-காயத்ரி மோதல்!!

Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (12:42 IST)
பிக்பாஸில் இருந்து ஓவியா வெளியேறிய பிறகு நிகழ்ச்சியை பார்க்கும் ஆர்வம் குறைந்துவிட்டது என ரசிகர்கள் கூறிவரும் நிலையில், தற்போது காயத்ரி மற்றும் ரைசா இடையே சண்டை தொடங்கிவிட்டது.

 
பிக்பாஸ் வீட்டில் வையாபுரி அல்லது சினேகன் இருவரில் யாரை எவிக்ஷனிலிருந்து காப்பாற்றலாம் என பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோது, ரைசா சினேகனுக்கு ஆதரவாக பேசினார். அப்போது "சினேகன் சார் புத்திசாலி, உங்களுக்கு ஏதாவது  பிரச்சனை வந்தால் அவர் உதவி தேவைப்படும்" என கூறினார்.
 
இதனை கேட்ட காய்த்ரி "என் பிரச்சனைகளை நானே சரி செய்துகொள்வேன்" என பதில் கூறியபோது, ரைசா சிரித்துவிட்டார். "அவ ஏன் என்னை பார்த்து சிரிச்சா... நான் என்ன குழந்தையா. என் பிரச்சனையை எனக்கு சமாளிக்க தெரியும்" எனவும் காயத்ரி  கேட்டார். இதனை தொடர்ந்து இருவரிடையே வாய்சண்டை முற்றியது.

இதனிடையே ரைசா சிநேகனிடம் இப்பதான் புரியுது, ஓவியாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று கூறுகிறார். இதனால் ரைசாவும் ஓவியாவை போல ரைசாவையும் ஓரம்கட்ட படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தாமதம் ஆகிறதா விஜய்- ஹெச் வினோத் திரைப்படம்?

சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தில் இணைந்த விஜய்யின் தம்பி!

கல்கி பட ரிலீஸில் இருந்து பின்வாங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்… காரணம் என்ன?

முடிவுக்கு வந்த லைகா அஜித் பிரச்சனை… விடாமுயற்சி ஷூட்டிங் எப்போது?

விஜய் அழைத்தாலும் அரசியலுக்கு வரமாட்டேன்… KPY பாலா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments