Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுவனுடன் இணைந்தார் இசைஞானி இளையராஜா

Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2018 (15:43 IST)
இசைத்துறையில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பதித்து அதில் யாரும் இன்று வரை ஏணி வைத்து எட்டமுடியாத அளவிற்கு உயர்ந்தவர் இசைஞானி இளையராஜா 
 
இளையராஜா தன்னுடைய இசை பயணத்தில் எம்எஸ்வியை தவிர வேறு யாருடனும் இணைத்து இசையமைத்ததில்லை அவர்கள் இருவரின் இசையில் உருவான மெல்ல திறந்தது கதவு இரும்புப்பூக்கள், செந்தமிழ் பாட்டு, செந்தமிழ் செல்வன், என் இனிய பொன் நிலாவே,விஷ்வ துளசி போன்ற படங்களுக்கு இசை அமைத்துள்ளனர். 
 
இப்படி இருக்க இப்போது எம்.எஸ்.விக்கு அடுத்து தன் இளையமகன் யுவன் சங்கர் ராஜாவுடன் சேர்ந்து இசையமைக்க உள்ளார் இளையராஜா. 
 
யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில்  சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கவுள்ள இந்த படத்தில் இசைஞானி இளையராஜாவும் -யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து இசையமைப்பது என்பது இதுவே முதல் முறை.
 
இவர்களது ரசிகர்களுக்கு இந்த செய்தி இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் ரித்திகா சிங்கின் க்யூட் க்ளிக்ஸ்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

“கேம்சேஞ்சர் கதை ஏன் ஹிட்டாகவில்லை என்று…” – கார்த்திக் சுப்பராஜ் பதில்!

சிம்புவுக்கு நான் எப்போதும் ‘நோ’ சொல்ல மாட்டேன்: STR 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்..!

வேட்டையன் படத்திற்கு பின் மீண்டும் ரஜினிகாந்த் - பகத் பாசில் கூட்டணி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments