Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் மணிகண்டன் மேல் புகார் அளித்த இளையராஜா!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (17:16 IST)
இயக்குனர் மணிகண்டன் கடைசி விவசாயி படத்தில் தனது இசை தூக்கப்பட்டதை அடுத்து இசையமைப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளாராம்.

காக்கா முட்டை, குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகியப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மணிகண்டன் தனது நான்காவதாகப் படமாகக் கடைசி விவசாயி எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்தப்படத்தில் 70 வயது விவசாயி ஒருவர் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இசையமைப்பாளராக இளையராஜா ஒப்பந்தம் ஆனார்.

இந்நிலையில் அவரின் பின்னணி இசையமைப்புக் குறித்து திருப்தி இல்லாததால் அவற்றை அப்படியே நீக்கிவிட்டாராம் மணிகண்டன். பின்னர் ரிச்சர்ட் ஹார்வி என்ற வெளிநாட்டு இசையமைப்பாளரை பயன்படுத்தி பின்னணி இசையை உருவாக்கியுள்ளாராம். பின்னணி இசை அமைப்பதில் இந்தியாவிலேயே சிறந்த இசையமைப்பாளர் எனப் பெயர்பெற்றவர் இளையராஜா. அவரின் இசையையே மணிகண்டன் பிடிக்கவில்லை என நீக்கி இருப்பது அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் சர்வதேச திரைப்பட விழாக்களில் இளையராஜாவின் இசையோடுதான் அனுப்பப்பட்டதாம். இந்நிலையில் தன்னைப் படத்தை விட்டு நீக்கியது குறித்து கடுமையான கோபத்தில் இருக்கிறாராம் இளையராஜா. இது சம்மந்தமாக அவர் இசையமைப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐயாம் சாரி ஐய்யப்பா… அறிவு புகட்டி அனுப்பப்பா… இசைவாணி பாடலை விமர்சித்த எம் எஸ் பாஸ்கர்!

காதலர் தினத்தில் ரிலீஸ் ஆகும் தனுஷின் அடுத்த படம்!

வெளிநாடுகளில் வசூல் சாதனைப் படைத்த சிவகார்த்திகேயனின் ‘அமரன்’… வசூல் எவ்வளவு தெரியுமா?

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படம் குறித்து ஜி வி பிரகாஷ் கொடுத்த அப்டேட்!

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் முதல் படத்தின் ஹீரோ யார்? மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments