Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜா பயோபிக் கைவிடப்படுகிறதா?... பரபரப்பைக் கிளப்பிய தகவல்!

vinoth
சனி, 2 நவம்பர் 2024 (08:03 IST)
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ‘இளையராஜா’ என்ற பெயரில் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை இளையராஜாவோடு இணைந்து கனெக்ட் மீடியா தயாரிக்கிறது . இந்த படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.

இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இதற்காக இயக்குனர் அருண் மாதேஸ்வரன், இளையராஜாவோடு நெருக்கமாகப் பழகியவர்கள், அவரின் நண்பர்கள் மற்றும் அவரின் சொந்த ஊர் மனிதர்கள் ஆகியோரை சந்தித்து தகவல்களைத் திரட்டினார். இப்போது திரைக்கதை அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன. படத்தின் திரைக்கதையை எஸ் ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார்.

இதையடுத்து படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என சொல்லப்பட்ட நிலையில் இப்போது இந்த படமே கைவிடப்பட்டுள்ளதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற தகவல் பரவி வருகிறது. படத்தைத் தயாரிப்பதாக இருந்த நிறுவனம் இந்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த தெளிவுபடுத்தல் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹன்சிகாவின் லேட்ட்ஸ்ட் ஹாட் புகைப்பட ஆல்பம்!

விண்டேஜ் லுக்கில் ஜொலிக்கும் அனுபமா பரமேஸ்வரன்!... கார்ஜியஸ் ஆல்பம்!

சஞ்சய் & சந்தீப் இணையும் படத்தின் ஷூட்டிங் எப்போது?.. வெளியான தகவல்!

பொறுத்தது போதும் என இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம்!

இன்று வெளியாகிறது மம்மூட்டி & கௌதம் மேனன் இயக்கும் படத்தின் டீசர்!

அடுத்த கட்டுரையில்
Show comments