Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“இளையராஜா பயோபிக்கில் நானும் இருப்பேன்…” பாரதிராஜா கொடுத்த அப்டேட்!

vinoth
வியாழன், 28 மார்ச் 2024 (14:33 IST)
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த படத்தை இளையராஜாவோடு இணைந்து கனெக்ட் மீடியாவோடு தயாரிக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். கமல்ஹாசன் திரைக்கதை எழுத உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் தொடக்க விழாவில் வெற்றிமாறன், கமல்ஹாசன் மற்றும் பாரதிராஜா உள்ளிட்ட தமிழ் சினிமா பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த பட அறிவிப்பு கோடிக்கணக்கான இளையராஜா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இப்போது படம் பற்றி மேலும் சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தில் என் நண்பனுக்காக நானும் இருப்பேன் என இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். இதுபற்றி பேசியுள்ள அவர் “நானும் அவரும் இணைந்து பல நாடகங்களில் நடித்துள்ளோம். அப்போது என்னைக் கலாய்க்கும் விதமாக அவர் நடிப்பார். கண்டிப்பாக அவர் பயோபிக்கில் நான் இருப்பேன்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹரி - பிரசாந்த் படத்திற்கு பாலிவுட் ஹீரோயின்.. மும்பையில் கதை விவாதம்..!

அன்பறிவ் இயக்கும் படத்தை தள்ளி போடுகிறாரா கமல்ஹாசன்? ‘தக்லைஃப்’ தோல்வி காரணமா?

எச். வினோத் இயக்கத்தில் ரஜினிகாந்த்.. எதிர்ப்பு தெரிவிப்பாரா தனுஷ்?

சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2: போட்டியாளர்கள் யார், யார்?

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments