Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு கல்யாண ஆசை வந்துருச்சுடி; தனது திருமண ஆசையை வெளிப்படுத்திய விக்னேஷ் சிவன்....!

Webdunia
வெள்ளி, 18 மே 2018 (11:53 IST)
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கோலமாவு கோகிலா’, சுருக்கமாக ‘கோகோ’. ஹீரோயினை முன்னிலைப்படுத்திய இந்தப் படத்தில், நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்துள்ளார்.
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. இருப்பினும் இருவரும்  தங்கள் திருமண தேதியை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா நடித்து வரும் 'கோலமாவு கோகிலா' என்ற  படத்தில் இடம்பெற்றுள்ள, 'எனக்கு கல்யாண ஆசை வந்துருச்சுடி' என்ற பாடல் மூலம் தனது திருமண ஆசையை நயன்தாராவுக்கு மறைமுகமாக சமூக  வலைத்தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார். 
அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதிய இந்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடல் வரிகளை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள  விக்னேஷ் சிவன், அதில் தனது இன்ஸ்டாகிராம் பக்க லிங்க்கையும் இணைத்துள்ளார். அந்த புகைப்படத்தில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்கள் பெயரின்  முதல் எழுத்துகள் கொண்ட தொப்பியை அணிந்து ரொமான்ஸ் போஸ் கொடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அடுத்த கட்டுரையில்