Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் சாருக்கு மாற்று யாருமே இல்லை… துல்கர் சல்மான் பகிர்ந்த தகவல்!

vinoth
வியாழன், 24 அக்டோபர் 2024 (08:59 IST)
தமிழ் மற்றும் தெலுங்கில் தனுஷ், சம்யுக்தா ஆகியோர் நடிப்பில் உருவான் வாத்தி படத்தை தெலுங்கு இயக்குனரான வெங்கட் அட்லூரி இயக்கி இருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இந்த படம் வசூல் ரீதியாகக் வெற்றிப்படமாக கருதப்பட்டது. இதையடுத்து வெங்கட் இயக்கும் அடுத்த பேன் இந்தியா படமான லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.

இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. பீரியட் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் வங்கி ஊழியராக துல்கர் சல்மான் நடிக்கிறார். படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு இந்த படம் அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய துல்கர் சல்மான் அஜித் பற்றி பேசியது கவனம் ஈர்த்துள்ளது. அதில் “ அஜித் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் மங்காத்தா படம் எனக்கு மிகவும் பிடித்த படம். அவருக்கு மாற்று யாருமே இல்லை. லக்கி பாஸ்கர் இயக்குனர் வெங்கட்டுக்குக் கூட அவரை வைத்து படம் இயக்கவேண்டும் என ஆசையில் உள்ளார்” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா இயக்கத்தில், ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும்  நிரஞ்சன் சுதீந்திரா  நடிக்கும் "சீதா பயணம்"!!

"போகுமிடம் வெகு தூரமில்லை" படக்குழுவை பாராட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!!

கல்லூரி பேராசிரியர் புஷ்பநாதன் ஆறுமுகம் இயக்கத்தில் உருவாகும் ‘க. மு - க. பி’

“சார் படம் மூலம் அடுத்த கட்டத்தை எட்டிய இயக்குநர் போஸ் வெங்கட் !!

நடிகர் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments