Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாலிவுட்டின் ‘ஜோக்கர் 2’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Mahendran
புதன், 3 ஏப்ரல் 2024 (17:02 IST)
ஹாலிவுட்டில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான ஜோக்கர் முதல் பாகம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.


டூட் ஃபிலிப்ஸ் இயக்கத்தில்,  ஜாக்குவின் பீனிக்ஸ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜோக்கர்’ திரைப்படம்  நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம்  ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட விருதுகளை பெற்றது

இந்த படம்  உலகமெங்கும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை டிசி காமிக்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

பிரபல பாப் பாடகி லேடி காகா நாயகியாக நடித்து வரும் இந்த படத்திற்கு ‘ஜோக்கர்: ஃபாலி அ டியூக்ஸ் (Joker: Folie à Deux) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  மேலும் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மச்சானின் காதலியை கரம்பிடித்த மாமா! காமெடி கலாட்டா! – குருவாயூர் அம்பலநடையில் OTT விமர்சனம்!

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

பாலைவனத்தில் க்யூட்டான போட்டோஷூட்டை நடத்திய மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments