Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’சூப்பர் டா தம்பி!!’’ நடிகர் தனுஷை புகழ்ந்த ஹாலிவுட் இயக்குநர்கள்...

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (23:24 IST)
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படம் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் தற்போது ரிலீஸாகி உள்ளது. இந்தியாவில் நாளை நண்பகலில் ரிலீஸாகவுள்ள நிலையில் இப்படம் குறித்து ஹாலிவுட் இயக்குநர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர்.

தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படம் 190 நாடுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், பிரஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், போலிஷ், போர்ச்சுகீஸ், பிரேசிலியன், ஸ்பானிஷ் (காஸ்ட்டிலியன்), ஸ்பானிஷ் (நியூட்ரல்), தாய், இந்தோனேசியன், வியட்நாமிஸ் ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி ட்ரெண்டிங்கில் வைரலாகி வருகிறது.

கடந்த மே மதமே வெளியாகவேண்டிய இந்த படம் கொரோனா பெருந்தொற்றினால் ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றது. தியேட்டர்களில் வெளியாகவில்லை என்றாலும் 17 மொழிகளில் ஜகமே தந்திரம் வெளியாகப்போவதை கேட்டு தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில், சுருளியாக தனுஷ் நடித்துள்ள, 2 மணி நேரம் 37 நிமிடம் ஓடக்கூடிய ஜகமே தந்திரம் படம் நாளை(18 ஆம் தேதி)ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில்

இந்தியாவில் நண்பகல் 12: 30 மணிக்கும் அமெரிக்காவில் அதிகாலை 12 மணிக்கும்( தற்போது), இங்கிலாந்தில் காலை 8 மணிக்கும், ஜப்பானில் மாலை 4 மணிக்கும், இப்படம் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனுஷ் தற்போது நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் தி கிரே மேன் The Gray man என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இயக்குநர்களான Russo Brothers இப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

’’சூப்பர் டா தம்பி!  தனுஷுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது.  ஜகமே தந்திரம் குழுவுக்கு எங்கள் வாழ்த்துகள்’’ எனத் தெரிவித்து, இப்படத்தின் டிரைலரை  வெளியிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அடுத்த கட்டுரையில்
Show comments