Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (11:28 IST)
துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’: ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் அவ்வபோது தமிழிலும் நடித்து வருவார் என்பதும் அந்த வகையில் அவர் தமிழில் நடித்த ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் துல்கர் சல்மான் நடித்துள்ள அடுத்த தமிழ் படம் ‘ஹே சினாமிகா’. பிரபல டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கத்தில் உருவாகி வந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 25 என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. துல்கர் சல்மான் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ள இந்த படத்தில் அதிதி ராவ் ஹைத்ரி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments