Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகும் கமல் மகள்

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (12:38 IST)
‘பாபநாசம்’ படத்தில் கமலின் இளைய மகளாக நடித்த எஸ்தர், தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

 
 
கேரளாவைச் சேர்ந்த எஸ்தர், மலையாளத்தில் பிரபல குழந்தை நட்சத்திரமாக விளங்கி வருகிறார். இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் ஹீரோயின்களின் சின்ன வயது வேடத்திலும், ஹீரோக்களுக்குத் தங்கையாகவும்  நடித்துள்ளார்.
 
மலையாளத்தில் வெளியான ‘த்ரிஷ்யம்’ படத்தில், மோகன்லாலின் இளைய மகளாக நடித்தார். அந்தப் படம் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டபோது, கமலின் இளைய மகளாக நடித்தார். அதே படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும்,  வெங்கடேஷின் இளைய மகளாக நடித்தார்.

 
தற்போது 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கும் எஸ்தர், தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ‘குழலி’ என்ற இந்தப் படத்தை, சேர கலையரசன் இயக்குகிறார். கிராமத்துப் பெண்ணாக நடிக்கும் எஸ்தர், படத்திலும் 10ஆம் வகுப்பு மாணவியாகவே நடிக்கிறார்.

ரஜினியின் ’கூலி’ படத்தில் சத்யராஜ் நடிப்பது கன்பர்ம்.. என்ன கேரக்டர் தெரியுமா?

சரத்குமார் படங்களை இயக்குனர் திடீர் மறைவு.. திரையுலகினர் இரங்கல்..!

வாழ்நாளில் சில பாத்திரங்கள்தான் இப்படி அமையும்… 18 ஆண்டுகள் நிறைவு செய்த புதுப்பேட்டை குறித்து தனுஷ்!

தனுஷின் ராயன் படத்தின் ஆடியோ & டிரைலர் ரிலீஸ் தேதி இதுதான்!

இந்தியன் படத்தின் ரி ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments