Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நானா? ஹென்றி கெவிலின் பதில்!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (15:29 IST)
ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரங்களுக்கு டேனியல் கிரேய்க் முழுக்கு போட்டுவிட அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஹாலிவுட் படங்களில் ஜேம்ஸ் பாண்ட் பட சீரிஸை பெரும்பாலான மக்கள் ஏற்கொண்டு கொண்டாடினர். இதுவரை வெளியான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் லேசன்பை, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிரோஸ்னன் என பிரபலமான நடிகர்கள் நடித்தனர். தற்போது 25 வது ஜேம்ஸ் பாண்ட் படம் நோ டைம் டு டை டேனியல் கிரைக் நடிப்பில் உருவாகியுள்ளது.

இந்த படத்தோடு தான் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடிக்க போவதில்லை என அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் புதிய ஜேம்ஸ் பாண்டாக அடுத்து நடிக்கப் போவது மேட் மேக்ஸ் புகழ் டாம் ஹார்டி என சொல்லப்பட்டது. அவரைத் தவிர ரிச்சர்ட் மேடன் , மைக்கேல் ஃபாஸ்பெண்டர் , டேனியல் கலுயா ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இப்போது மற்றொரு நடிகரான ஹென்றி கேவில் பெயரும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் பரிசீலனையில் உள்ளது. ரசிகர்கள் பலரும் ஜேம்ஸ் பாண்ட் வேடத்துக்கு கேவில் பொருத்தமாக இருப்பார் எனக் கூறி வருகின்றனர்.

இது சம்மந்தமாக இப்போது பதிலளித்துள்ள ஹென்றி கெவில் ‘அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நானா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும். ஒரு வேளை தயாரிப்பாளர் என்னை விட வயது குறைவான நடிகரை தேர்வு செய்யலாம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல இயக்குனருக்கு இப்படி ஒரு நோயா? – நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்திய கரண் ஜோஹர்!

இன்று ‘தல’ தோனி பிறந்தநாள்! சல்மான் கானோடு கொண்டாடிய தோனி! - வைரலாகும் வீடியோ!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments