Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் டீசல் படத்தின் ஷூட்டிங் நிறைவு… அப்டேட் வெளியிட்ட படக்குழு!

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2023 (07:56 IST)
ஹேண்ட்ஸம் இளம் நடிகராக கோலிவுட் சினிமாவின் பெண்கள் ரசிகர்களை அடியோடு கவர்ந்திழுத்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் அமலா பால் நடிப்பில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளான சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன் பிறகு பொறியாளன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து வாய்ப்பில்லாமல் இருந்து வந்த அவர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துக்கொண்டு பெரும் பிரபலமானார். மேலும் பியார் பிரேமா காதல் மற்றும் தாராள பிரபு திரைப்படம் அவரது கெரியரில் மைல் கல்லாக அமைந்தது. 

இப்போது அவர் பார்க்கிங், லப்பர் பந்து மற்றும் டீசல் என பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகி வரும் டீசல் படத்தின் ஷூட்டிங் 100 நாட்களுக்கு மேல் நடந்து வந்த நிலையில் இப்போது நிறைவு பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அவர் நடிப்பில் பார்க்கிங் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேஷ் பாபு & ராஜமௌலி இணையும் படத்தில் இந்த பிரபல ஹீரோதான் வில்லனா?

இங்கிலாந்து நாட்டின் தேசிய விருதைப் பெற்ற தனுஷின் கேப்டன் மில்லர்!

குட்னைட் தயாரிப்பு நிறுவனத்தோடு கைகோர்க்கும் சசிகுமார்!

ஹெச் வினோத்தோடு ஒரு படம்… லாக் செய்த சிவகார்த்திகேயன்!

"நானும் ஒரு அழகி" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments