தீபாவளி ரிலீஸூக்கு என்ன தகுதி இருக்கிறது எனக் கேட்டார்கள்… டீசல் படம் குறித்து ஹரிஷ் கல்யாண் ஆதங்கம்!

vinoth
செவ்வாய், 14 அக்டோபர் 2025 (15:28 IST)
ஹேண்ட்ஸம் இளம் நடிகராக கோலிவுட் சினிமாவின் பெண்கள் ரசிகர்களை அடியோடு கவர்ந்திழுத்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் அமலா பால் நடிப்பில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளான சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன் பிறகு பொறியாளன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து வாய்ப்பில்லாமல் இருந்து வந்த அவர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு பெரும் பிரபலமானார். மேலும் பியார் பிரேமா காதல் மற்றும் தாராள பிரபு திரைப்படம் அவரது கெரியரில் மைல் கல்லாக அமைந்தது. சமீபத்தில் அவர் நடித்த பார்க்கிங் மற்றும் லப்பர் பந்து ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன.

இதையடுத்து அவர் நடிப்பில் நீண்டகாலமாக உருவாக்கத்தில் இருந்த ‘டீசல்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகிறது. டீசல் படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். அதுல்யா ரவிக் கதாநாயகியாக நடித்துள்ளார்.  SP பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் படம் குறித்து சமீபத்தில் பேசியுள்ள ஹரிஷ் கல்யாண் “என் தயாரிப்பாளரிடம் ஒருவர் தீபாவளிக்கு ரிலீஸாக உங்கள் படத்துக்கு என்ன தகுதி உள்ளது எனக் கேட்டுள்ளார்? பெரிய ஹீரோ இருக்காரா? இல்ல பெரிய இயக்குனர் இருக்காரா? எனக் கேட்டுள்ளார். ஒரு படம் தீபாவளிக்கு ரிலீஸாக என்ன தகுதி வேண்டும்? ஒரு நல்ல படம், நல்ல குழு இருந்தால் போதாதா? அந்த நம்பிக்கையோடதான் ‘டீசல்’ படத்த ரிலீஸ் பண்ணுகிறோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை.. கம்பேக் கொடுத்த கேபிஒய் பாலா.. இதுல சிம்புவுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments