Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலின் ரத்னம் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

vinoth
புதன், 27 மார்ச் 2024 (14:24 IST)
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் ஹரி. அவர் இயக்கிய சாமி, ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றவை. சமீபத்தில் அவர் அருண் விஜய் நடிப்பில் உருவான யானை திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதற்கு அடுத்து ஹரி தற்போது விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களுக்குப் பிறகு இருவரும் மூன்றாவது முறையாக இந்த படத்தில் இணைகின்றனர். கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் இந்த படத்தை குறுகிய காலத்தில் படப்பிடிப்பு நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் ஷூட்டிங் அடுத்தடுத்து நடந்து வந்தது. படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, யோகி பாபு நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு ’ரத்னம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் சூரி தான் ஹீரோ.. ஆச்சரிய தகவல்..!

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments