Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடித்த படம்: ஃபர்ஸ்ட்லுக் - ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (15:07 IST)
பிரபல நடிகை ஹன்சிகா இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஆர் கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா நடித்துவரும் திரைப்படம் காந்தாரி. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 
 
இந்த படத்தில் ஹன்சிகா இரண்டு வேடத்தில் நடித்து உள்ளதாகவும் அதில் ஒரு வேடம் பழங்குடியின பெண் வேடம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி வெளியாகும் என போஸ்டரில் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படம் திரில்லர் கதையம்சம் கொண்ட எமோஷனல் படம் என்றும் இந்த படம் ஹன்சிகாவுக்கு திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் இயக்குனர் ஆர். கண்ணன் தெரிவித்துள்ளார். 
 
ஹன்சிகா நடித்த ’மஹா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் இந்த படம் அவருக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சீனாவிலும் மகாராஜாவின் ஆதிக்கம்.. ஆமிர்கானுக்கு நிகரான வசூல்!

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் மாளவிகா மோகனன்!

க்யூட் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்… லேட்டஸ்ட் ஆல்பம்!

படம் கனெக்ட் ஆகுமா என பயந்தேன்.. ஆனால்?- மத கஜ ராஜா குறித்து திருப்பூர் சுப்ரமணியம் பாராட்டு!

கதையில சாவுன்னு இருந்தாலே என் பெயரை எழுதிடுறாங்க… மேடையில் கலகலப்பாக பேசிய கலையரசன்!

அடுத்த கட்டுரையில்
Show comments