Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷூட்டிங்கில் தவறி விழுந்த ஜி.வி.பிரகாஷ்

Webdunia
புதன், 3 மே 2017 (12:19 IST)
ஷூட்டிங்கின்போது, ஜி.வி.பிரகாஷ் மேலிருந்து தவறி கீழே விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

 
 
டான்ஸ் மாஸ்டரான பாபா பாஸ்கர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘குப்பத்து ராஜா’. சென்னையில் வசிக்கும் குப்பத்து மக்களைப் பற்றிய இந்தப் படத்தில், ரா.பார்த்திபன், ஜி.வி.பிரகாஷ், பூனம் பாஜ்வா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில்  நடிக்கின்றனர். 
 
இதன் படப்பிடிப்பு, சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. நூலறுந்து பறந்து  கொண்டிருக்கும் பட்டத்தை, ஜி.வி.பிரகாஷ் துரத்திப் பிடிப்பதாக காட்சி. இதற்காக ஒவ்வொரு வீட்டின் மேலேயும் தாவிக்குதித்து  ஓடினார் ஜி.வி. 
 
அப்போது, எதிர்பாராத விதமாக கால் சறுக்க, கீழே விழுந்தவருக்கு பலத்த அடி. பதறிப்போன படக்குழுவினர் ஷூட்டிங்கைத் தள்ளி வைக்கலாம் என்று சொல்ல, அதை மறுத்துவிட்டு காலில் பேண்டேஜோடு நடிக்க ஆரம்பித்துவிட்டாராம். அவருடைய முதல் படமான ‘டார்லிங்’ ஷூட்டிங்கின்போது, தலையில் அடிபட்டது. அந்தப் படம் ஹிட். அதைப்போலவே இந்தப் படமும்  ஹிட்டாகும் என்று நம்புகிறார் ஜி.வி.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments