Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே டுவிட்டில் எத்தனை அப்டேட்டுக்கள்: ஜிவி பிரகாஷுக்கு ரசிகர்கள் நன்றி

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (09:04 IST)
நடிகரும் இசை அமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நேற்று பதிவு செய்த டுவிட் ஒன்றில், தான் நடித்துவரும் ’ஜெயில்’ படம் குறித்து தனுஷ் நடித்து வரும் படம் குறித்தும், சூர்யா நடித்துவரும் சூரரைப்போற்று படம் குறித்தும் அப்டேட்களை அள்ளி அள்ளிக் கொடுத்ததால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
நேற்று ஜிவி பிரகாஷ் பதிவு செய்த டுவிட்டரில் தான் நடித்து முடித்துள்ள ‘ஜெயில்’ படத்தில் இடம்பெற்ற ’காத்தோடு’ என்ற பாடலை தனுஷ் பாடியிருப்பதாகவும், இந்தப் பாடல் கபிலன் எழுதியிருப்பதாகவும், விரைவில் இந்த பாடல் குறித்த ஒரு சூப்பர் அப்டேட் வெளிவரும் என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படத்தில் ஏற்கனவே ஐந்து பாடல்கள் வெளிவந்த நிலையில் புதிதாக மூன்று பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் பாடல்கள் குறித்த அப்டேட் விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்
 
மேலும் தனுஷ் நடித்து வரும் 43 வது படமான ’கர்ணன்’ படத்தின் பின்னணி இசை பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் தனுஷ் ஒரு பாடலை எழுதி அவரே பாடி உள்ளதாகவும் இந்த பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளிவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு டுவீட்டில் ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்டுக்களால் தனுஷ், சூர்யா ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்