Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிராண்ட் ஃபைனல்; நடுஇரவில் நடைபெற்ற திடீர் எவிக்‌ஷன்

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2017 (11:32 IST)
100 நாட்களை கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, கிராண்ட் ஃபைனலுக்கான நாட்கள் நெருங்கிக்கொண்டே இருக்கிறது, ஆனால், அதற்குரிய எந்தவித ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமலே கழிகிறது பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம்.

 
 
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் 4 நாட்களில் முடிவடைய இருக்கிறது. நிகழ்ச்சியின் பிரம்மாண்ட மேடையில் 15 பேருடன் போட்டியிட்டு இறுதியாக டைட்டிலை வெல்லப்போவது யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலாக  இருக்கின்றனர். கடந்த வாரம் கமல்ஹாசன் அடுத்த வார நடுவில் வீட்டில் இருந்து ஒருவர் வெளியேற்றப்படுவார் என  கூறியிருந்தார். நேற்று இந்த பிக்பாஸ் டீமை விட்டு, நாளை ஒருவர் வெளியேறப்போகிறார் என்ற பிக்பாஸின் அறிவிப்புடன், விளக்குகள் அணைக்கப்பட்டன.
 
பிக்பாஸ் வீட்டில் அமைதியான சூழலில் ஓர் திடீர் திருப்பமாக, நீங்கள் எவிக்‌ஷனுக்கு தயாராகுங்கள் என அறிவித்தார் பிக்பாஸ்.  இதனையடுத்து நடு இரவில் வெளியேற்றும் விதமாக, கலர் விளக்குகளால் போட்டு எவிக்‌ஷனை அறிவித்தார் பிக்பாஸ். அதில்  சிநேகன் நீங்கள் காப்பாற்றப்பட்டீர்கள் என்று கூறினார். யார் எவிக்‌ஷன் என்பதை ரகசியமாக வைத்துள்ளனர். ஆனால் ஆரவ்  தனது பெட்டியுடன் வெளியேறுவதுபோல் ப்ரொமோவில் காட்டப்பட்டது.

பிக்பாஸின் இறுதி மேடையில் கால் பதிக்க முடியாமல் வெளியேறும் அந்த நபர் ஆரவ்வாக இருக்க கூடும். நேற்றே பதினோரு லட்சம் கொடுக்க முன்வந்தார்கள். மக்கள் விருப்பப்பட்டால் மட்டுமே வெளியேறுவேன் என வசனம் பேசி, முதல் பரிசிற்கு ஆசைப்பட்டு, ஏமாந்த ஒருவர் இன்று வெறுங்கையுடன் வெளியேறுகிறார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெரிசலில் காயம் அடைந்த சிறுவனுக்கு ரூ.2 கோடி.. அல்லு அர்ஜூன் தந்தை அறிவிப்பு..!

’தமிழ்ப்படம் 3’ படத்தின் அப்டேட் கொடுத்த சிவா.. எப்போது படப்பிடிப்பு?

க்ரீத்தி ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!

96 புகழ் கௌரி கிஷனின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பாடல்களுக்கு மட்டும் சுமார் 95 கோடி ரூபாய்.. கேம் சேஞ்சர் படம் பற்றி ஆச்சர்யத் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments