Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் சிரித்து சொதப்பியதால் மாஸ்டர் காட்சி நீக்கப்பட்டதா? கௌரி கிஷான் பதில்!

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (08:13 IST)
மாஸ்டர் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் இப்போது இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது . அதே நேரத்தில் 15 நாட்களுக்குள் அமேசான் ஓடிடி ப்ரைம் தளத்தில் வெளியானது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் நீளம் கருதி வெட்டப்பட்ட காட்சிகளை இப்போது இணையத்தில் வெளியிட்டனர். ஆனால் எதிர்பார்ப்பை விட அந்த காட்சிக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. அதை நீக்கி இருக்க வேண்டாமே என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அந்த காட்சியில் இடம்பெற்றிருந்த நடிகை கௌரி கிஷான் சோகமான காட்சியில் சிரிப்பது போல இருப்பதால்தான் அதனை நீக்கி விட்டதாக சமூகவலைதளங்களில் வெளியானது.

அதற்கு இப்போது கௌரி கிஷன் பதிலளித்துள்ளார். அதில் ‘நான் அந்த இடத்தில் சிரிக்கவில்லை. சில கோணங்களில் அப்படி இருக்கலாம். நான் சொதப்பி இருந்தால் அந்த காட்சியை டப்பிங்குக்குக் கொண்டு வந்து இருக்க மாட்டார்கள். படத்தின் நீளம் கருதியே நீக்கி இருப்பார்கள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

200 கிமீ வேகத்தில் சென்ற அஜித் கார்.. மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டன்னிங்கான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆல்பம்!

தமன்னாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

விஷாலை நம்பாத பைனான்சியர்கள்… கனவுப் படமான துப்பறிவாளன் 2 டிராப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments