Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவுண்டமணி பிறந்தநாள் கொண்டாடினாரா?

Webdunia
புதன், 27 மே 2015 (11:45 IST)
நடிக்க வந்த நாள் முதல் பேட்டி தந்ததில்லை கவுண்டமணி. பீல்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பேட்டி என்று யார் வந்தாலும் நோ என்ட்ரிதான் அவரிடம். அதேபோல் பிறந்தநாள் கொண்டாட்டமும். பல படங்களில் அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை கேலி செய்திருக்கிறார்.
 
அப்படிப்பட்ட கவுண்டமணி தனது படத்தை விளம்பரப்படுத்த பேட்டி தருகிறார், பிறந்தநாள் கொண்டாடுகிறார் என்றால் எப்படி இருக்கும். சில ஊடகங்கள் இப்படியொரு செய்தியை வெளியிட்டு கவுண்டமணியை கலாய்த்தன. ஆனால், உண்மை என்ன?
 
கடந்த திங்கள்கிழமை கவுண்டமணியின் பிறந்தநாள். அன்று, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். பிறந்தநாள் அன்று எந்த நடிகராவது படப்பிடிப்பில் கலந்து கொண்டால் பெரிய சைஸ் கேக் வாங்கி வெட்டுவது வாடிக்கை. அப்படி கவுண்டமணியிடமும் கேட்டிருக்கிறார்கள். என்னது கேக்கா? அந்த சமாச்சாரமெல்லாம் நமக்கு எப்போதும் கிடையாது என்று கேக் வெட்ட மறுத்துள்ளார். 
 
இதுதான் நடந்தது. அதனை ஏன் சிலர் மாற்றி எழுதுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. 

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments