Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாட்ரிக் ஹிட்டுக்கு தயாராகும் மணிகண்டன்… பா ரஞ்சித்தோடு கூட்டணி!

vinoth
சனி, 17 பிப்ரவரி 2024 (08:10 IST)
கடந்த ஆண்டு மே மாதம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இதையடுத்து அதே தயாரிப்பு நிறுவனத்துக்கு மணிகண்டன் லவ்வர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்ட போதே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. படத்தில் டாக்ஸிக் காதலராக மணிகண்டன் நடித்திருந்தார். தன்னுடைய கேரியர், காதல் வாழ்க்கை தொடர்பான தடுமாற்றங்களில் அவர் எவ்வளவு மோசமானவராக நடந்து கொள்கிறார், அதில் இருந்து எப்படி வெளிவருகிறார் என்பதை சொல்லி இருந்தது லவ்வர் திரைப்படம். இந்த படமும் இளைஞர்களைக் கவர்ந்து வெற்றிப் படமாக அமைந்துள்ளது.

இதையடுத்து அவர் அடுத்து நடிக்கும் படத்தை இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘புல்லரிக்குது தம்பி. என் அப்பா ஞாபகம் வந்துடுச்சு’.. டூரிஸ்ட் பேமிலி இயக்குனரைப் பாராட்டிய ஆட்டோ ஓட்டுனர்!

இயற்கை சீற்றத்துக்கு மத்தியில் ‘மதராஸி’ படத்தின் ஷூட்டிங்கை முடித்த முருகதாஸ்!

இந்த பிறந்தநாளுக்கு எந்த அப்டேட்டும் கிடையாது… விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

நடிப்பு அரக்கன்கள் ஃபஹத் &எஸ் ஜே சூர்யா நடிக்கவிருந்த படம் கைவிடப்பட்டதா?!

லீக் ஆன பிரபாஸின் ‘தி ராஜா சாப் படக் காட்சிகள்’.. படக்குழு எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments