Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கோட்’ படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ்.. வெங்கட் பிரபுவின் சூப்பர் அறிவிப்பு..!

Siva
வெள்ளி, 21 ஜூன் 2024 (12:36 IST)
தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் ஏற்கனவே ’கோட்’ படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆனது என்பதும் விஜய் பாடிய இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனது என்பது தெரிந்தது. இந்த நிலையில் நாளை விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இரண்டாவது பாடல் வெளியாக இருப்பதாக இயக்குனர் வெங்கட்பிரபு தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். மேலும் இந்த இரண்டாவது பாடலையும் விஜய் தான் பாடியுள்ளார் என்று அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சின்ன சின்ன கண்கள் என்ற இந்த பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் நாளை இந்த பாடலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முதல் சிங்கிள் பாடல் போலவே இந்த இரண்டாவது பாடலும் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"நானும் ஒரு அழகி" திரை விமர்சனம்!

உறுதியானது கார்த்தி- டாணாக்காரன் இயக்குனர் தமிழ் கூட்டணி- ஷூட்டிங் எப்போது?

முதல் முறையாக யுவன் இசையில் பாடும் சந்தோஷ் நாராயணன்… ஏழு கடல் ஏழு மலை அப்டேட்!

ஜீ.வி. பிரகாஷ் குமார் ஹாரர் திரைப்படமான 'பார்க்' தி படத்தின் பர்ஸ்ட் லுக்!

ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments