Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் அடுத்த படத்தில் இணைந்த கமல் பட இசையமைப்பாளர்

Webdunia
புதன், 15 மே 2019 (20:55 IST)
அஜித் நடித்து முடித்துள்ள 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அஜித்தின் 60வது படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கவுள்ளதாம். இந்த படத்தையும் போனிகபூர் தயாரிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளார்
 
இந்த நிலையில் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசனின் படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்து வந்த ஜிப்ரான், தற்போது முதல்முறையாக அஜித் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இந்த படத்திற்காக ஜிப்ரான் நான்கு பாடல்களையும் ஒரு தீம் மியூசிக்கையும் கம்போஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது
 
மேலும் அஜித் 60' படத்தில் இரண்டு நாயகிகள் என்றும், அதில் ஒருவர் நிக்கி கல்ராணி என்றும் இன்னொருவர் பாலிவுட் நடிகை என்றும் கூறப்படுகிறது. பாலிவுட் நடிகை நடிக்கும் கேரக்டர் கொஞ்சம் நெகட்டிவ் சாயலில் இருக்கும் என்றும் தகவல் கசிந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments