Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்றா ஓட்டை ரைசாவுக்கு! காயத்ரியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (22:58 IST)
பிறருக்கு முற்பகல் செய்யின் தனக்கு பிற்பகல் வரும் என்ற வள்ளுவர் குரலுக்கு ஏற்ப ஓவியாவை கார்னர் செய்து டார்கெட் செய்த காயத்ரியை பழிவாங்க சரியான சந்தர்ப்பம் நெட்டிசன்களுக்கு கிடைத்துள்ளது.



 
 
கடந்த வாரம் ஆறு பேர் நாமினேட் ஆனதால் பிக்பாஸ் புண்ணியத்தில் காயத்ரி தப்பித்துவிட்டார். ஆனால் இந்த வாரம் காயத்ரியும், ரைசாவும் மட்டுந்தான் நாமினேட் ஆகியுள்ளனர். எனவே அனைவரும் ரைசாவுக்கு ஓட்டு போட்டால் காயத்ரியை பழிவாங்கிவிடலாம் என்று ஓவியா ஆர்மியினரும், நெட்டிசன்களும் தயாராகிவிட்டனர்.
 
நாமினேட் செய்த அடுத்த நிமிடத்தில் இருந்தே ரைசாவுக்கு ஓட்டுக்கள் குவியத்தொடங்கிவிட்டது. இந்த வாரம் காயத்ரியை அசிங்கப்படுத்தி வெளியேற்றுவதுதான் நெட்டிசன்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க். தெய்வம் நின்று கொல்லும் நேரம் வந்துவிட்டது, எனவே 'போட்றா ஓட்டை ரைசாவுக்கு' என்று ஓவியா ஆர்மியினர் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

200 கிமீ வேகத்தில் சென்ற அஜித் கார்.. மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டன்னிங்கான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆல்பம்!

தமன்னாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

விஷாலை நம்பாத பைனான்சியர்கள்… கனவுப் படமான துப்பறிவாளன் 2 டிராப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments