Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் இணைந்த இன்னொரு பிரபலம்!

Webdunia
ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (08:00 IST)
பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காட்டுப் பகுதியிலும் மற்ற சில பகுதிகளையும் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்தது என்பதும் இந்த படத்தில் சூரி மட்டுமின்றி முக்கிய வேடத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடிக்கிறார் என்பதும் தெரிந்ததே 
 
சமீபத்தில் வெளியான பர்ஸ்ட்லுக் போஸ்டரில் சூரி, விஜய் சேதுபதி ஆகிய இருவரது போஸ்டர்களும் அட்டகாசமாக இருந்தது. இதனை அடுத்து இந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலானது.
 
இந்த நிலையில் சூரி கதாநாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியை அடுத்து இன்னொரு பிரபலம் இணைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. அவர் இயக்குநர் கௌதம் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது 
 
‘விடுதலை’ படத்தில் கௌதம் மேனனுக்கு ஒரு முக்கிய கேரக்டரை இயக்குனர் வெற்றிமாறன் கொடுத்திருப்பதாகவும் அந்த கேரக்டருக்கு அவர்தான் பொருத்தமாக இருப்பார் என கருதியதால் அவரை தேர்வு செய்ததாகவும் வெற்றிமாறன் தரப்பிலிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள கௌதம் மேனன் இந்த படத்திலும் அதேபோல் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

இயக்குனர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

“கலகலப்பு” புகழ் நடிகர் கோதண்டராமன் காலமானார்!

தாயின் மாரை அறுத்து எப்படி சாப்பிட முடியும்… வணங்கான் விழாவில் சூர்யாவுக்காக கொந்தளித்த சசிகுமார்!

ஆகாஷ் முரளி & அதிதி நடிப்பில் உருவாகும் ‘நேசிப்பாயா’ பட ரிலீஸ் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments