Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒளிப்பதிவாளரை மாற்றிய கெளதம் மேனன்

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2017 (19:59 IST)
கௌதம் மேனன் இயக்கிவரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ஒளிப்பதிவாளரை மாற்றியுள்ளார். 


 


 
தனுஷ், மேகா ஆகாஷ், ராணா டகுபதி நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கி வந்தார் கெளதம் மேனன். இந்தப் படத்தில் கேரளாவைச் சேர்ந்த ஜோமன் டி.ஜான் என்பவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்தார். என்ன காரணத்தினாலோ அந்தப் படத்தை முடிக்காமலேயே விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். இந்தப் படத்திலும் ஜோமனே ஒளிப்பதிவாளராகத் தொடர்ந்தார்.
 
ஆனால், திடீரென இந்தப் படத்தில் இருந்து ஜோமன் விலகியிருக்கிறார். அஜய் தேவ்கன், பரினிதி சோப்ரா, தபு நடிக்கும் படத்தில் ஏற்கெனவே கமிட்டாகி இருந்ததாகவும், அந்தப் படத்துக்காக இதிலிருந்து விலகியதாகவும் ஜோமன் தெரிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக, பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் மகன் சந்தானகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். 23 வயதான சந்தானகிருஷ்ணன், பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மனிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments