ஜி வி பிரகாஷ் சைந்தவி விவாகரத்து வழக்கு முடிவு…!

vinoth
புதன், 1 அக்டோபர் 2025 (06:26 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இருக்கும் ஜி வி பிரகாஷ் 2013 ஆம் ஆண்டு, தனது பள்ளிகால தோழியும் பாடகியுமான சைந்தவியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குக் கடந்த 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இப்படி தமிழ் சினிமாவின் நட்சத்திரத் தம்பதிகளாக இருந்த இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷும், பாடகி சைந்தவியும் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தனர்.

இவர்களின் விவாகரத்துக்குக் காரணம் ஜி வி பிரகாஷ் நடிகை திவ்யபாரதியைக் காதலிப்பதுதான் என்றொரு தகவல் இப்போது வரை பரவி வருகின்றது. அதன் உண்மைத்தன்மை இதுவரை யாருக்கும் தெரியாது. ஆனால் விவாகரத்து அறிவித்த பின்னரும் ஜி வி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் ஒன்றாக இணைந்து இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ஓராண்டுக்கும் மேல் நடைபெற்று வந்த அவர்களின் விவாகரத்து வழக்கு நேற்று முடிவுக்கு வந்தது. இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவெடுத்துள்ளதை நீதிமன்றம் அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தையை சைந்தவியே வளர்ப்பதில் தனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று ஜி வி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை.. கம்பேக் கொடுத்த கேபிஒய் பாலா.. இதுல சிம்புவுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments